தத்துவம்

1. இன்னைக்குத் தூங்கினா நாளைக்கு எந்திரிக்கலாம்.
ஆனால் நாளைக்குத் தூங்கினா இன்னைக்கு எந்திரிக்க முடியாது.

2. பஸ்சுல கலெக்டரே ஏறினாலும் , முதல் சீட்டு டிரைவருக்குத் தான்.

3. சைக்கிள் கேரியர்ல டிபன் கேரியரை வெச்சி எடுத்துட்டுப் போகலாம்.
ஆனால் டிபன் கேரியர்லே சைக்கிளை வெச்சு எடுத்துட்டுப் போக முடியாது.

4. டிக்கெட் வாங்கிட்டு உள்ளே போனா அது சினிமா தியேட்டர்.
ஆனால் உள்ளே போய்ட்டு டிக்கெட் வாங்கினா அது ஆபரேஷன் தியேட்டர்.

5. என்னதான் மீனுக்கு நீந்தத் தெரிஞ்சாலும்,
அதால மீன் குழம்புலே நீந்த முடியாது.

6. அயர்ன் பாக்ஸ்லே அயர்ன் பண்ண முடியும்.
ஆனா பென்சில் பாக்ஸ்லே பென்சில் பண்ண முடியாது.

7. நீ என்ன தான் காஸ்ட்லி மொபைல் வச்சிருந்தாலும், அதுல எவ்வளவு தான் ரீசார்ஜ் பண்ணாலும்,
உன்னால உனக்கு கால் பண்ண முடியாது.

8. க்ரீம் பிஸ்கட்லே க்ரீம் இருக்கும்,
ஆனா நாய் பிஸ்கட்லே நாய் இருக்காது.

9. ஒரு எறும்பு நினைச்சா 1000 யானைகளைக் கடிக்கும்.
ஆனால் 1000 யானைகள் நினைச்சாலும் ஒரு எறும்பைக் கூட கடிக்க முடியாது.

10. குவார்ட்டர் அடிச்சிட்டு குப்புற படுக்கலாம்.
ஆனால் குப்புற படுத்துக்கிட்டு குவார்ட்டர் அடிக்க முடியாது.

11. செல்போனுலே பாலன்ஸ் இல்லைன்னா கால் பண்ண முடியாது.
ஆனால் மனுசனுக்கு கால் இல்லைன்னா பாலன்ஸ் பண்ண முடியாது.

12. ரயில்வே ஸ்டேஷன்லே போலீஸ் ஸ்டேஷன் இருக்கலாம்.
ஆனால் போலீஸ் ஸ்டேஷன்லே ரயில்வே ஸ்டேஷன் இருக்க முடியாது.

13. என்னதான் கராத்தேயிலே பிளாக் பெல்ட் வாங்கினாலும்,
சொறி நாய் தொரத்தினா ஓடித்தான் ஆகணும்.

இதுதான் வாழ்க்கை.

பொன்மொழிகள்

1. பேசும்முன் கேளுங்கள், எழுதுமுன் யோசியுங்கள், செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்.

2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.

3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக் கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.

4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும் போது தானும் தலையைக்கும் நண்பன் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்.

5. நோயைவிட அச்சமே அதிகம் கொல்லும்

6. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கெள்கிறோம்.

7. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கெண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.

8. சமையல் அமையாவிடில் ஒரு நாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடல் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் சிறக்காவிடல் வாழ்நாளே இழப்பு.

வயதான கடிதம்


படத்தை click செய்து பெரிதாக உணருங்கள்

திருக்குறள்

திருக்குறள் 134வது அதிகாரம் (IT அதிகாரம்) சமீபத்தல்
கண்டறியப்பட்டுள்ளது அந்த அதிகாரம் பின்வருமாறு:


Bug கண்டுபிடித்தாரே ஒருத்தர் அவர்நாண
Debug செய்து விடல்.

Copy-paste செய்து வாழ்வாரே வாழ்வார்
மற்றெல்லாம் codingகெழுதியே சாவர்.

எம்மொழி மறந்தார்க்கும் jobஉண்டாம்
Jobஇல்லை “C”யை மறந்தார்க்கு.

Logic, syntax இவ்விரண்டும் கண்ணென்பர்
Program செய் பவர்.

Netல் தேடி copy அடிப்பதின்
மூலையிலிருந்து logic யோசி.

பிறன் code நோக்கான் எவனோ
அவனே Tech Fundu.

எது தள்ளினும் projectல் requirement
தள்ளாமை மிகச் சிறப்பு.

Chatடெனில் yahoo-chat செய்க இல்லையேல்
Chatடலின் Chatடாமை நன்று.

Bench, Project, e-mail இம்மூன்றும்
Programmer வாழ்வில் தலை.

கீதாசாரம்


எது நடந்ததோ,
அது நன்றாகவே நடந்தது.

எது நடக்கிறதோ,
அது நன்றாகவே நடக்கிறது.

எது நடக்க இருக்கிறதோ,
அதுவும் நன்றாகவே நடக்கும்.

உன்னுடையதை எதை இழந்தாய்?
எதற்காக நீ அழுகின்றாய்?

எதை நீ கொண்டு வந்தாய்,
அதை இழப்பதற்கு?

எதை நீ படைத்திருந்தாய்,
அது வீணாவதற்கு?

எதை நீ எடுத்துக் கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.

எதை கொடுத்தாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.

எது இன்று உன்னுடையதோ,
அது நாளை மற்றொருவருடையதாகிறது.

மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்.

இதுவே உலக நியதியும்,
எனது படைப்பின் சாராம்சமுமாகும்.

- பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்